முதுநிலை மருத்துவ மாணவர் கருத்தரங்கு துவக்கம்
சென்னை: இந்திய மருத்துவர் சங்க சென்னை பிரிவின் சார்பில், மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. 18ம் ஆண்டு கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் டிச. 19ம் தேதி துவங்கியது. பயிற்சி முகாம் குறித்து, இயக்குனர் டாக்டர் பிரபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பொது மருத்துவத் துறைத் தலைவர் செல்வம், டாக்டர் சங்கர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகி வருகின்றன. இந்த சிகிச்சை முறைகள் குறித்து பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் உடனடியாக தெரிந்து கொள்ள, இந்த முகாம் உதவியாக இருக்கும். மருத்துவத் துறையில் தற்போது பிரிவு வாரியாக சிறப்பு மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அத்தகைய சிறப்பு மருத்துவத்தில் உலக அளவில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று மாணவர்களுக்கு கருத்துரைகளை வழங்குகின்றனர். ஒரேகூரையின் கீழ் மருத்துவத்துறையின் அனைத்து நவீன சிகிச்சை முறைகளையும், மாணவர்கள் இந்த கருத்தரங்கின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பயிற்சி முகாம் டிச. 21ம் தேதி நிறைவடைகிறது. கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், dreprabhu@hotmail.com என்ற இ-மெயில் முகவரி அல்லது 093827 30296 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு மேற்கொண்டு பங்கேற்கலாம்.