உயர்வகுப்பு ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு: மாயாவதி பேச்சு
சென்னையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி மாநாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி உயர் வகுப்பு ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு அளிக்க முயன்று வருகிறோம். ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இதனை அமல்படுத்த முடியும். இதற்காக மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள உயர் ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைந்தால் மட் டுமே எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டுப் பலன் கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் தலித், பழங்குடி மக்கள் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியிருந்தாலும் அவர்களுக்கு தலித், பழங்குடியினர் என்ற அடிப்படையிலேயே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்றார் மாயாவதி.