உள்ளூர் செய்திகள்

இலவச பொருத்துநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திண்டுக்கல்: இலவசமாக பிட்டர் பயிற்சிக்கு காதுகேளாத மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜோசப்ரவி கூறியதாவது: சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாண்டு பிட்டர் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி இரண்டாண்டு அளிக்கப்படும். ஊக்கத்தொகையாக மாதத்திற்கு ரூ.300 வழங்கப்படும். 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் திண்டுக்கல் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநில ஆணையர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால்நேரு உள்வட்ட சாலை கே.கே. நகர், சென்னை-600078 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்