உள்ளூர் செய்திகள்

சி.என். கல்லூரியை அரசு ஏற்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு: சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி ஈரோடு தலைமை தபால் அலுவலகம் முன் கல்லூரி ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசின் கட்டுப்பாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாக இக்கல்லூரி இயங்கினாலும், இதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி இக்கல்லூரியை தமிழக அரசு முழுமையான அரசு கல்லூரியாக அறிவித்தால் கூடுதலாக பாடங்கள் சேர்க்கப்பட்டு மாணவர்கள் பயனடைவர். இதனால் மாவட்டத்தில் அரசு கல்லூரி இல்லை என்ற குறை நீங்கும் என்பதை வலியுறுத்தி கல்லூரி அலுவலர்கள், பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவ மாணவியர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் கல்லூரி வளாகத்துக்கு முன்புறம் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பேராசிரியர் மனோகரன் தலைமையில் பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்