உள்ளூர் செய்திகள்

கணினி சான்றிதழ் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: தொழில்நுட்ப கல்வித் துறையால் நடத்தப்பட்ட கணினி சான்றிதழ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக அறிவிப்பு: தொழில்நுட்ப கல்வி துறையால் கடந்த ஜூனில் கணினி சான்றிதழ் (ஆபீஸ் ஆட்டோமேசன்) படிப்பிற்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் தேர்வு நடந்த பாலிடெக்னிக் கல்லூரி மையங்களிலும் வெளியிடப்படுகிறது. மேலும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணைய தளமான www.tndte.comல் அறியலாம். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், தக்க ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்