சிவில் சர்வீஸ் இலவச பயிற்சிக்கான எழுத்துத்தேர்வு
புதுச்சேரி: பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பட்டதாரி இளைஞர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற தகுதியானவர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பட்டதாரி இளைஞர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி, கடந்த 2013-14ம் நிதியாண்டு துவங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 15 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 2014-15ம் கல்வியாண்டில் 15 பேரை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்ய, பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 189 பேர் தேர்வெழுதினர். அமைச்சர் ராஜவேலு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழக சேர்மன் பாலமுருகன், மனித நேய ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர், தேர்வில் பங்கேற்றவர்களை பாராட்டினர். எழுத்து தேர்வு முடிவு இன்று 28ம் தேதி அறிவிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 15 பேருக்கு, முதல் நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் துவங்கப்படுகிறது.