பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விழுப்புரம்: பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடந்தது. கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு போன்ற பாடங்களில் விரைவாக விடைகள் கண்டறியவும், ஒரே நேரத்தில் இரு பணிகளை மேற்கொள்வதற்கு, மாணவர்களுக்கிடையே திறமைகளை ஊக்குவிக்கவும், கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. விழுப்புரம் விஸ்வகர்ம ஆபரணத் தொழிலாளர் சங்க சமுதாயக் கூடத்தில் நடந்த முகாமிற்கு, சங்கத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் சேகர், மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகி ரமேஷ் மற்றும் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி, அகில பாரத சொர்ணகார் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் அசோகன் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார். இதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பயிற்சி பெற்றனர். சங்க நிர்வாகிகள் ஆதவன்முத்து, சங்கரநாராயணன், ரமேஷ், சேகர், சுந்தரராஜன், வெங்கடேசன் மற்றும் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.