உள்ளூர் செய்திகள்

கூடுதல் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்திற்கு அடியில் உட்கார்ந்து படிக்கின்றனர். சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் அரசு பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கூடுதலாக 4 வகுப்பறைகள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் 6, 7, 8 வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். நடவடிக்கை இல்லை. கூடுதல் வகுப்பறை கட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்