பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா
உளுந்தூர்பேட்டை: பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ரஷியாபானுவுக்கு, 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக குமரகுரு எம்.எல். ஏ., வழங்கினார். இதே பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ராசியாபானுவுக்கு 10 ஆயிரம் ரூபாய், எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் குஸ்காருக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக குமரகுரு எம்.எல்.ஏ., வழங்கினார். மேலும், எலவனாசூர்கோட்டை பள்ளியில் திருக்குறளை தெளிவாகவும், தங்குதடையின்றி விரைந்து கூறிய மாணவர் சதீஷை பாராட்டி, 5 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்கினார்.