உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

கோவை: பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 101 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கல்லூரிகள் மற்றும் பல்கலையில், மாணவர் சங்க தேர்தல் நடத்த வேண்டும்; அரசு கல்லூரிகளை மேம்படுத்த, புதிய தொழில்நுட்ப பாடப் பிரிவுகளை துவங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று பல்கலையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, பல்கலை சார்பில் ஒப்புக் கொண்டதை அடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்