பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டம்
மதுரை: மதுரையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டம், செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. தலைவர் கார்த்திகேயன், சட்ட செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஆத்மநாதன், மனோகரன், ஜெயசந்திரன், பிரபா கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அறிவியலில் உள்ளது போல், தமிழ், ஆங்கில பாடங்களுக்கும் ஆரல் (உணர்வு), ஓரலுக்காக (வாசிப்பு) மதிப்பெண் வழங்க வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் கூடுதலாக தலைமையாசிரியர் பணியிடம் உருவாக்கி, அதை 6 முதல் 10ம் வகுப்புக்காக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.