மாணவர்களுக்கு அன்றாட தேவைப்பொருட்கள் வழங்கும் விழா
உடுமலை: உடுமலை, ரோட்டரி கிளப் சார்பில் சம்பங்காடு பள்ளி மாணவர்களுக்கு, அன்றாட தேவைப்பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் தேவசிக்குட்டிஜோஸ் தலைமை வகித்தார். காந்தலுார் ஊராட்சித்தலைவர் மாதன் வரவேற்றார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு மேஜை, நாற்காலி, படுக்கை விரிப்புகள், தலையணை, பாடப்புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள் உட்பட ஏழு பொருட்கள் வழங்கப்பட்டன. ரோட்டரி கிளப் செயலாளர் சிவப்பிரகாஷ் நன்றி கூறினார்.