உள்ளூர் செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்பநிலை பயிற்சி

திருப்பூர்: மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்பநிலை பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆறு வயது பூர்த்தியாகும் வரை ஆரம்பநிலை பயிற்சி அளித்து, அதற்குபின் நல்லநிலையில் உள்ள குழந்தைகளுடன் கல்வி பயிலும் அளவுக்கு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தயார்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம். நடப்பு கல்வியாண்டு முதல், திருப்பூர் பாரதி வித்யாஸ்ரம் சிறப்பு பள்ளியில், அக்குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இப்பள்ளியில் 48 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுடன், அரசு உதவியுடன் 15 பேர் இலவச பயிற்சி பெறுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறுகையில்,‘ஆறு வயது வரையுள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, ஆரம்பநிலை பயிற்சி அளிக்கப்படுகிறது. படிப்படியாக பயிற்சி அளித்து, ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்வியை தொடரும் வகையில், தயார்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, 0421 - 2200 834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்