உள்ளூர் செய்திகள்

கிராமப்புற குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கான ஓட்டம்

சென்னை: சென்னை மெரினாவில் கிராமப்புற குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கான ஓட்டம் நடந்தது. இதில் சர்வதேச கால்பந்து வீரர் கவ்ரமான் சந்த் உட்பட, 1,200 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள யுரேகா குழந்தைகள் தொண்டு நிறுவனம், கிராமப்புற குழந்தைகள் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக ஓட்டம் நடத்தி வருகிறது. நேற்று, மெரினா கடற்கரை காந்தி சிலையில் இருந்து, உழைப்பாளர் சிலை வரை நடந்த ஓட்டத்தில், சர்வதேச கால்பந்து வீரர், கவ்ரமான் சிங், கல்லுாரி மாணவர்கள், பெருநிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து, யுரேகா குழந்தைகள் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: குழந்தைகள் தினத்தையொட்டி, இந்த ஆண்டு நடைபெற்ற ஓட்டத்தில், 350ரூபாய் வீதம் செலுத்தி, 1,200 பேர் ஓட்டத்தில் பங்கேற்றனர். இதன்மூலம் கிடைத்த பணம், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்