மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டிகள்
கோவை: மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மத்திய அரசின் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. மாவட்டளவிலான இப்போட்டியில், பள்ளிகள் மற்றும் ஒரு கல்லுாரி இடம்பெற்றன. யு.கே.ஜி., முதல் கல்லுாரி வரை, மாணவியர் தங்கள் உடலை பல்வேறு கோணங்களில் வளைத்து திறமைகளை வெளிப்படுத்தினர். மொத்தம் நான்கு பிரிவுகளில்(ஓபன் கேட்டகிரி) போட்டி இடம்பெற்றது. ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் அமீன் பாஷா, செயலாளர் சையது இப்ராகிம், பொருளாளர் ரவிக்குமார், பயிற்சியாளர் சின்னசாமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.