உள்ளூர் செய்திகள்

பராமரிப்பற்ற விளையாட்டு மைதானங்களால் இளைஞர்களுக்கு சிரமம்

போடி: போடி நகராட்சி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைகின்றனர். இளைஞர்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக மைதானத்துடன் கூடிய தளவாடப் பொருட்கள் நகராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன. இதனை பராமரிக்கும் பணியும் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.புரம், பேராசிரியர் காலனி, தென்றல் நகர் ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்களை பாதுகாக்க சுற்றுச்சுவர் வசதி இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு மைதானங்கள் தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறியுள்ளன. விளையாட்டுப் பொருட்கள் வைக்கப்படும் பாதுகாப்பறைகளும் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. விளையாட்டு மைதானங்களை சீரமைப்பதுடன், சுற்றுச்சுவர் அமைக்கவும், விளையாட்டிற்கு தேவையான புதிய உடற்பயிற்சி கருவிகள் வழங்கவும் அப்பகுதி மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்