உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தினமலர் கல்விமலரின் ‘ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி’

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தினமலர் கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி திருவிழா இன்று நடக்கிறது. தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி திருவிழா கள்ளக்குறிச்சி வீ.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் இன்று 3ம் தேதி நடக்கிறது. அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் நடக்கிறது. பொதுத் தேர்வினை மாணவ மாணவிகள் பயமின்றி தெளிவாக எழுதுவது, நல்ல மதிப்பெண் பெற்று முதன்மையாக தேர்ச்சி பெற சிறப்பு ஆசிரியர்கள் கருத்துரைகள் வழங்குகின்றனர். மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையுடன் குறித்த நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும். ஜெயித்துக் காட்டுவோம் கல்வி நிகழ்ச்சியில் பேனா, நோட்புக், முக்கிய வினா விடை புத்தகம், மாணவ மாணவிகள் உடல் நலம், மன நலம் பாதுகாத்து கொள்வது குறித்த புத்தகங்கள் வழங்கப்படுகிறது. பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம். கள்ளக்குறிச்சி பஸ் நிலை யத்திலிருந்து காலை 7.30 மணி முதல் ஏ.கே.டி., பள்ளி சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்