மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான தடகள போட்டி
கோவை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான தடகள போட்டி மாணவர் பிரிவில் நொய்யல் பப்ளிக் பள்ளியும், மாணவியர் பிரிவில் அவினாசிலிங்கம் பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன. எஸ்.என்.எஸ்., குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் சார்பில் நான்காம் ஆண்டு எஸ்என்எஸ் ஜூனியர் அத்லடிக் மீட்-2015 என்ற தலைப்பில் நடந்த போட்டியில், 150 பள்ளிகளை சேர்ந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 8 வயது, 10, 12, 14, 16, 18 வயது பிரிவுகளில் பங்கேற்றனர். தனிநபர் சாம்பியன்கள் விவரம் மாணவர்கள் 8 வயது-நொய்யல் பள்ளி சங்கர்; 10 வயது- ஜி.ஆர்.டி.,பள்ளி நிஷாந்த்; 12 வயது- ஆர்.கே.வி.,பள்ளி சஜாத்; 14 வயது- ரசகொண்டலார் பள்ளி லோகேஷ்; 16 வயது- கே.வி.எம்., பள்ளி அபிஜித்தாஸ்; 18 வயது- ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஜோசுவா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். மாணவியர் சாம்பியன்கள் விவரம் 8 வயது -கே.வி.எம்.,பள்ளி சங்கமித்ரா; 10-வயது சி.எம்.எஸ்.,பள்ளி அக்ஸயா; 12-வயது தமிழரசி; 14 வயது - ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி தெரசா கிரேஸ் மிகேல்; 16 வயது- அவினாசிலிங்கம் பள்ளி ஷாலினி; 18 வயது- சி.ஆர்.ஆர்.,பள்ளி நந்தினி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். பள்ளிகள் சாம்பியன்கள் விவரம் மாணவர்: 8 வயது-ஹோலி பேமிலி பள்ளி; 10 வயது-ஜி.ஆர்.டி., சிபிஎப் மெட்ரிக் பள்ளி; 12 வயது-நொய்யல் பப்ளிக் பள்ளி; 14, 16 வயது-மணி பள்ளி; 18 வயது- ஸ்டேன்ஸ் பள்ளி. மாணவியர்: 8 வயது-கேந்திரியா வித்யாலயா பள்ளி; 10 வயது, 12, 14, 16 வயது- அவினாசிலிங்கம் பள்ளி; 18 வயது- சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளி.