உள்ளூர் செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் விளையாட்டுப் போட்டிகள் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் நடக்கிறது. கலை, இலக்கியப் போட்டிகள், கலை விழாக்கள், 6ம் தேதி சென்னை தி.நகர் போக் சாலை கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்