உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் நூலகங்கள்; மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் 96, மேல்நிலைப்பள்ளிகள் 100 செயல்படுகின்றன. மேல்நிலைப்பள்ளிகளில் இரு கல்வி மாவட்டத்திலும் 26 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பெரும் பாலும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே நூலகங்கள் செயல் படுகின்றன. பள்ளியின் மானிய நிதியில் இருந்து நூலகத்திற் கென புதிய புத்தகம், நாளிதழ்கள் வாங்குகின்றனர். பொது அறிவு, நாட்டு நடப்பு, நிகழ்கால செய்திகளை தெரிந்து கொள்ள குறிப்பிட்ட நேரம் மாணவர்களை நூலகங்களை பயன்படுத்த வைக்க வேண்டும். ஆசிரியர் விடுமுறை எனில் அந்த வகுப்பை பிற ஆசிரியர் கவனிக்காத பட்சத்தில் அவர்களை நூலகத்தை பயன்படுத்த அறிவுறுத் தலாம். நூலக உதவியாளர்களும் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொடுத் து கண்காணிக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் நூலக பயன்பாடு என்பது தற்போது அரிதாகி வருவதாக புகார் கூறப்படுகிறது. ஆசிரியர்களும் இதற்கான அவசியம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைப்பதில்லை. நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்கி வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தலைமை ஆசிரியர்கள் விடுமுறை எனில் சில பள்ளி களில் நூலகத்தை திறப்பதே இல்லை எனவும் கூறப்படுகிறது. இன்றைய சூழலில் மதிப்பெண் மட்டும் போதாது. பிற துறைகளின் அறிவு சார்ந்து இருந்தால் தான் போட்டித்தேர்வு போன்ற பிற தேர்வு களை சந்திக்க முடியும் என்ற நிலை உள்ளது. தேர்ச்சி விகிதம் அதிகரிப்பை மட்டுமே கருத்தில் கொண்டு மாணவர்களை தயார் படுத்தினாலும், வாசிப்பு பழக்கம், அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுதல், வரலாறு நூல்களை படிக்க வைத்தல் போன்ற பழக்கத்தை மாணவர்கள் இடையே ஏற்படுத்த வேண்டும். 10ம் வகுப்பில் கூட, வாசிப்பு தன்மை குறைந்த மாணவர்கள் இருப்பதை அறிய முடிகிறது. எனவே, தொய்வின்றி நூலகங்களை பயன்படுத்த தலைமை ஆசிரியர்கள், வகுப் பாசிரியர்கள் மாணவர்களை தூண்டவேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்