ஜெயித்துக் காட்டுவோம் மாணவர்களுக்கு அழைப்பு
குன்னுார்: தினமலர் நாளிதழின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, குன்னுாரில், புனித அந்தோணியார் பங்கு மண்டபத்தில் நடக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கிலும், டிவிஆர் அகடமி சார்பில், தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில், அனுபவ ஆசிரியர்கள் பங்கேற்று பேசுவர். அதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி, குன்னுார் அந்தோணியார் பங்கு மண்டபத்தில் நாளை நடத்தப்படுகிறது. காலை, 9:00 மணி முதல், எஸ்.எஸ்.எல்.சி., (ஸ்டேட் போர்டு) மாணவ, மாணவியருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி; மதியம்,12.30 மணிக்கு பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்கும், மாணவ, மாணவியருக்கு, பரிட்சையில் வரும் முக்கிய வினாக்கள் மற்றும் ப்ளூ பிரின்ட் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூசன்ஸ்; ஆவிஎஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவை இணைந்து வழங்குகின்றன.