உள்ளூர் செய்திகள்

பல்கலை கன்வீனர் கமிட்டி சென்னையில் ஆலோசனை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவரும் உயர்கல்வி செயலருமான அபூர்வா தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பல்கலை பதிவாளர் முத்துமாணிக்கம் (பொறுப்பு), கமிட்டி உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன், ராஜராஜன் பங்கேற்றனர்.பல்கலை தீ வைப்பு சம்பவம் குறித்து உறுப்பினர்களிடம் செயலர் விசாரித்தார். இதன் பின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட உதவி பொறியாளர் ஆனந்தகுமாரை சஸ்பெண்ட் செய்வது, ஜன.,யில் பல்கலை பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்