உள்ளூர் செய்திகள்

மத்திய படை தேர்வு முடிவு வெளியீடு

மத்திய பாதுகாப்புப் படை போலீஸ் உட்பட, ஆறு துறைகளில், 62 ஆயிரம் காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.மத்திய ராணுவ துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஆறு துறைகளின் கான்ஸ்டபிள் காலியிடங்களுக்கு, 2015 நவம்பரில், தேசிய அளவில் தேர்வு நடந்தது. 62 ஆயிரத்து, 390 கான்ஸ்டபிள் காலியிடங்கள், இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான முடிவுகளை, நேற்று, மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்