உள்ளூர் செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாணவ, மாணவியர் தவிப்பு

சென்னையை சேர்ந்தவர் இந்துமதி, அவர் உட்பட ஏழு மாணவ, மாணவியர் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:அண்ணா நகரைச் சேர்ந்த காஞ்சனா என்பவர், பிலிப்பைன்ஸ் நாட்டில், மருத்துவ கல்லுாரியில் சேர்த்துவிடுவதாக, சென்னையைச் சேர்ந்த 26 மாணவ, மாணவியர்களிடம் தலா ஆறு லட்சம் ரூபாய் வாங்கினார்.சுற்றுலா விசாவில், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அழைத்து சென்ற அவர், அங்கு ஒரு வீட்டில் தங்க வைத்து இருந்தார். பின், அங்கீகாரம் பெறாத கல்லுாரியில் சேர்த்துவிட்டார். அது மருத்துவ கல்லுாரியே இல்லை. இதுபற்றி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததுடன், எங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்தார். நாங்கள் ஏழு பேரும் அங்கிருந்து தப்பி வந்துவிட்டோம். இன்னும் 19 மாணவ, மாணவியர் அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்டு, காஞ்சனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு பின்னால் மிகப்பெரிய சதி கும்பல் செயல்படுகிறது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்