மாவட்ட விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை!
சிவகங்கை: மாவட்ட விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு போட்டி ஏப்., 25 முதல் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் திறனுள்ள பள்ளி மாணவர்களுக்கு மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட ஊர்களிலும், மாணவிகளுக்கு திண்டுக்கல், தேனி, ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களிலும் மொத்தம் 23 விளையாட்டு விடுதிகளும், 5 விளையாட்டு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 7,8,9,11 வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சேருவதற்கு மாவட்ட அளவிலான தேர்வு வரும் ஏப்., 25 முதல் 30 வரை நடக்கிறது. தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், பீச் வாலிபால், வில்வித்தை, கிரிக்கெட் (மாணவர்கள் மட்டும்) போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் 201617 ம் ஆண்டு சேர்க்கைக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகி விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மானாமதுரை ரோடு, சிவகங்கை 630 561 என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ வரும் ஏப்., 2க்குள் அனுப்ப வேண்டும்.