உள்ளூர் செய்திகள்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இடஒதுக்கீடு துவக்கம்

சென்னை: செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில், விளையாட்டுத் துறையில் இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை, ஏப்ரல், 9ம் தேதி துவங்க உள்ளது. சென்னையில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள, செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில், 2016 - 2017ம் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக், எம்.இ., - எம்.டெக்., எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, விளையாட்டுப் பிரிவில் இருந்து, 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான தேர்வு, ஏப்ரல் 9ல், காலை, 9:௦௦ மணி அளவில், செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது. இதில், தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். இந்த தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு கல்வியுடன், தங்குமிடம் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் இலவசம். தடகளம், கூடைப்பந்து, வாலிபால், பாட்மின்டன், கபடி, டேபிள் டென்னிஸ், செஸ், நீச்சல், கால்பந்து, பளு துாக்குதல், பவர் லிப்டிங் ஆகிய பிரிவுகளில், இரு பாலருக்கும் தகுதித் தேர்வு நடைபெறும். ஹாக்கி மற்றும் பெஸ்ட் பிசிக் பிரிவில், மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.மேலும் விவரங்களுக்கு, செல்வகணபதி 98409 86678; எழில் பாண்டியன் 9840810952; பசுபதி 73583 46871; அய்யப்பன் 73583 46875 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்