மின் வாரிய தேர்வுக்கு ’ஹால் டிக்கெட்’
சென்னை: மின் வாரிய ஊழியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: உதவி வரைவாளர், தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, வரும், 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை, www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044 - 2235 8311/ 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.