வளர்கல்விப் பணியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
இப் போராட்டத்திற்கு மாநில தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். இச்சங்கம் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் நூலகப் பணியிடத்திற்கு வளர்கல்விப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். வளர்கல்விப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். வளர்கல்வித் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர பணி உத்தரவு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு எழுத அரசாணை வெளியிட்டு, அத்தேர்வு மூலம் அரசுத் துறையில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.