உள்ளூர் செய்திகள்

அகமதாபாத் ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு பிர்லா ஸ்காலர்ஷிப்

சிறந்த மாணவர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் இந்த கல்வி உதவித் தொகை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 2 மாணவர்களுக்கு மட்டுமே இந்த கல்வி உதவித் தொகை கிடைத்துள்ளது. இந்தக் கல்வி உதவித் தொகை பெற தேர்வு பெற்றுள்ள மாணவர்களுக்கு 1.75 லட்சம் வழங்கப்படும். ஆண்டுதோறும் 10 மாணவர்களுக்கு பிர்லா கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் ஆறுபேர் தவிர, பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்.மில் இரண்டு பேர், கோல்கத்தா, லக்னோ ஆகிய ஐ.எம்.எம்.,களில் தலா ஒருவருக்கு பிர்லா கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்