தமிழ் வளர்ச்சி துறைக்கு புதிய இயக்குனர்
தமிழ் வளர்ச்சித் துறையில் துணை இயக்குனராகப் பணியாற்றி வந்த எழிலரசுக்கு, இயக்குனராக பதவி உயர்வு அளித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் கூழமந்தல் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்தவர். அரசுப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய இவர், பல நூல்களை வெளியிட்டுள்ளார்.