சவால்களை சமாளிக்க தயாராக உள்ளோம்: பிட்ஜி
பிட்ஜி நிறுவனத்தின் செய்திக்குறிப்பு:நாம் அனைவரும் ஒரு அசாதாரண அவசரநிலைக்கு நடுவில் இருக்கிறோம். கோவிட் -19 பேரழிவு உலகெங்கும் பெருகி வருவதால் எதிர்காலத்தைப் பார்ப்பது கடினமாக தோன்றலாம். இந்த தொற்றுநோய் நாம் வாழும், விளையாடும், ரசிக்கும் மற்றும் படிக்கும் முறையை மாற்றிவிடும் என்று சில நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒரு மாற்றத்தக்க மாற்றம் மனிதகுலத்தை வெறித்துப் பார்க்கிறது. இந்த நேரத்தை நம் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்போம். நம் குழந்தைகளின் கல்வியில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? வரும் வாழ்க்கை, “கொரோனாவுக்கு முன்” மற்றும் “கொரோனாவுக்குப் பிறகு” என வரையறுக்கப்படும். கல்வி, பள்ளிகளை பற்றி விவாதிக்கும்போது, நீண்ட பயணத்திற்கு எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான உத்திகளையும் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது. பொருளாதார வீக்கத்தால், வேலை வாய்ப்புகள் கடினமாகலாம். எனினும், போதிய தகுதியும், திறனும் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு ஒரு சவாலாக இருக்காது. எதிர்கால தேவைக்கு ஏற்ப, உரிய திறன்களை வளர்த்துக்கொள்வதும், அதற்கேட்ப கல்வி முறையிலும், கற்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது.இத்தருணத்தில், FIITJEE குளோபல் பள்ளியில், எதிர்கால பார்வையை இணைத்துள்ளோம். கொரோனாவின் பின்னர் கட்டவிழ்த்து விடப்படும் சமூக சவால்களை ஏற்க தயாராக உள்ளோம். வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் என்றாலும், சிறந்த பயிற்சி பெறும் எங்கள் மாணவர்கள் அந்த சவால்களை எளிதாக சமாளிப்பார்கள்.கடந்த காலங்களில் வெறும் சொற்களாக இருந்ததிலிருந்து, பாதுகாப்பு இப்போது ஒரு தேவையாகவும், பழக்கமாகவும் மாறிவிட்டது. எங்கள் பள்ளி வளாகங்களில் ஐ.சி.எம்.ஆர்., பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மேலும், எங்கள் பாதுகாப்பு தொகுதிகளின் கீழ் கூடுதல் எஸ்.ஓ.பி.,களை உருவாக்கியுள்ளோம். சுகாதாரமான பழக்கவழக்கங்களை வளர்ப்பது மற்றும் சுகாதார கருவிகளைப் பயன்படுத்துவது அனைத்தும் நமது பள்ளி முறையின் ஒரு பகுதியாகும். அனைத்து FIITJEE குளோபல் பள்ளி, வகுப்பறைகள் ஆன்லைனிலும், டிஜிட்டல் முறையில் இயக்கப்பட்டவையாகவும் உள்ளன. அதாவது, ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகளில் கற்பிப்பவர்களுக்கு நெகிழ்வுத்தன்மை தயாராக உள்ளது. எதிர்பாராத ஊரடங்கிலும், எங்கள் மாணவர்களுக்கு தடையற்ற கற்றலை உறுதி செய்கிறது.எங்கள் மாணவர்கள் எல்லா வகையிலும் மிகவும் பாதுகாப்பான, விழிப்புணர்வு மற்றும் எதிர்காலத்தில் தயாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். FIITJEE குளோபல் ஸ்கூல் தனது இரண்டு அதிநவீன வளாகங்களை வேலூர் மற்றும் சென்னையில் இந்த ஆண்டு துவக்கி வருகிறது. FIITJEE குளோபல் ஸ்கூல், 28 ஆண்டுகள் கடந்த FIITJEE லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மேலும் தகவலுக்கு: www.fiitjeeglobalschool.com