உள்ளூர் செய்திகள்

இளைஞர்கள் உதவித்தொகை வருமான வரம்பு உயர்வு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், மாதந்தோறும் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 150 ரூபாயும், பிளஸ் 2 படித்தவர்களுக்கு 200 ரூபாயும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 300 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இதுவரை மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 488 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, 156 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல இளைஞர்கள் பயன் பெறும் வகையில், இத்திட்டத்தின் சலுகையை பயனாளிகள் பெற,  நிர்ணயிக்கப்பட்டுள்ள அவரது குடும்ப ஆண்டு வருமானம், ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் என்பதை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த நேற்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்