உள்ளூர் செய்திகள்

பட்டமேற்படிப்பு மையத்தில் குடியரசு தின விழா

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சங்கரராஜி தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் நிர்மலா, குடியரசு தின விழாவின் பெருமைகளைப் பேசினார். ஆங்கிலத் துறைத் தலைவர் ராஜவேலு குடியரசு நாள் கவிதை பாடினார். தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் பேராசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார். விழாவை தமிழ்த்துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார் ஒருங்கிணைத்தார். விழாவில் பேராசிரியர்களும், மாணவர்களும், ஆய்வாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்