உள்ளூர் செய்திகள்

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

புதுச்சேரி: உயர்கல்வித் துறையில் உதவி பேராசிரியர் உள்ளிட்ட 53 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடக்கிறது.புதுச்சேரி அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளில் காலியாக உள்ள 45 உதவி பேராசிரியர்கள், 4 நுாலகர்கள், 4 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் கடந்த மாதம் 13ம் தேதி https://dhte.py.gov.in மற்றும் https://centacpducheryy.in/job என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை 12ம் தேதி லாஸ்பேட்டையில் உள்ள உயர் கல்வித் துறை வளாகத்தில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தந்த கல்லுாரிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். அவர்கள் 15ம் தேதி பணியில் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அசல் சான்றிதழ்களுடன் வர தவறும்பட்சத்திலோ, குறிப்பிட்ட தேதிக்குள் பணியில் சேராவிட்டாலோ, அடுத்த நிலையில் உள்ள தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இத்தகவலை, உயர் கல்வித் துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயணா ரெட்டி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்