உள்ளூர் செய்திகள்

தமிழ் புத்தாண்டு விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழறிஞர்களை ஊக்கப்படுத்த, சித்திரை தமிழ் புத்தாண்டில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 71 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம், விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித்துறையின், www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிப்பவர்கள், தன் விவர குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நுால்களின் பெயர் பட்டியல், அந்த நுால்களில் ஒரு படி வீதம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, 26ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில், அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்