உள்ளூர் செய்திகள்

அமைச்சர் வீட்டை லேப் டெக்னீஷியன்கள் முற்றுகை

சென்னை: பணி நிரந்தரம் கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை, &'லேப் டெக்னீஷியன்&'கள், இரண்டாவது நாளாக, நேற்று முற்றுகையிட்டனர்.தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்த போது, ஆயிரக்கணக்கான பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆய்வகங்களில் பணியாற்ற, லேப் டெக்னீஷியன் கள் நியமிக்கப்பட்டனர். அவர்களது பணிக்காலம், இம்மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், &'கொரோனா காலத்தில், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். எனவே, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்&' என, அவர்கள் கோரி வருகின்றனர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன், இரண்டாவது நாளாக அவர்கள், முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களில், நான்கு பேரை அழைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு நடத்தினார்.அப்போது, &'மேலும் மூன்று மாதங்களுக்கு, பணி நீட்டிப்பு செய்கிறேன்; பின், படிப்படியாக நடவடிக்கை எடுக்கிறேன்&' என, அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்