உள்ளூர் செய்திகள்

பெண்கள் ஜெயிக்க வேண்டும்: பர்வீன் சுல்தானா

சென்னை: “படிப்பில் கவனத்தை சிதறடிக்கக் கூடிய எந்த விஷயத்தையும் தூக்கி எறியுங்கள்; வாழ்வில் முன்னேறலாம்,” என பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசினார். ‘தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியை பர்வீன் சுல்தானா பேசியதாவது:ஆண்கள் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், வாழ்வில் ஜெயித்து விடுகின்றனர். பெண்கள் அதிக மதிப்பெண் பெற்றும், சில நேரங்களில் அவர்களால் சாதிக்க முடிவதில்லை.ஆண்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும்; பெண்கள் ஜெயிக்க வேண்டும். இதை ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கான தளமாக, ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியை மாற்ற வேண்டும். நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனத்தைச் செலுத்த வேண்டும். மாணவர்கள், மொபைல் போன் உபயோகிப்பதையும், ‘டிவி’ பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும். இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்