உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள்

நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள திருவள்ளுவர் அரசு கல்லுாரியில் 60க்கும் மேற்பட்ட பகுதி நேர கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் கல்லுாரி முதல்வர் நாகலட்சுமி அதிகாரிகளிடம் பேசி, நிலுவை சம்பளம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று கவுரவ விரிவுரையாளர்கள் பகல் 1:30 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்