மே மத்தியில் உச்சத்தை தொடும் கொரோனா
புதுடில்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல், மே 11 - 15 ல் உச்சம் பெரும் எனவும், அப்போது 35 லட்சம் பேர், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவார்கள் என ஐஐடி விஞ்ஞானிகள் கணிதவியல் கோட்பாடு முறையில் கணித்து உள்ளனர்.இது தொடர்பாக கான்பூர் மற்றும் ஐதராபாத் ஐஐடி விஞ்ஞானிகள், கணிதவியல் கோட்பாடு முறையில் நடத்திய ஆய்வுகள் நடத்தினர். இதன்படி, மே 11 - 15 தேதிகளில் கொரோனா உச்சம் பெறுவதுடன் 33 முதல் 35 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். இதன் பின்னர், பரவலானது, ஆச்சர்யப்படுத்தும் வகையில், உயர்ந்த வேகத்தில் குறைந்து மே மாத இறுதியில் தொற்று எண்ணிக்கை குறையும் என தெரிவித்த கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணிந்திரா அகர்வால் டில்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏப்., 25- 30 காலகட்டத்தில் அதிகளவில் தொற்று பதிவாகும். மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்கள் ஏற்கனவே உச்சத்தை சந்தித்து விட்டது என தெரிவித்தார்.கொரோனா உச்சத்தை கணிக்க ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் கணிதவியல் கோட்பாடுகளில் உள்ள சில குறைபாடுகளை அகற்றிவிட்டு புதிய முறையில் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.