கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் எப்போது?
அரசு கல்லுாரிகளில், 1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பணிகளை தமிழக அரசின் உயர்கல்வி துறை கிடப்பில் போட்டுள்ளதால், அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 149 அரசு கல்லுாரிகளில், 5,500 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு முறை 2015ல் மட்டுமே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் தேர்வு நடத்தப்படவில்லை.கடந்த 2019ம் ஆண்டு, 2,332 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக, அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், யு.ஜி.சி., தகுதி பெற்ற தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய, சிறப்பு டி.ஆர்.பி., தேர்வு நடத்த திட்டமிட்டு, 2021 பிப்., 23 முதல் 26 வரை, சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தினர்.அதன்பின் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பணி நிரந்தரம் செய்யும் பணியை உயர் கல்வி துறை கிடப்பில் போட்டது. தற்போதைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய டி.ஆர்.பி., அல்லது டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இவரது அறிவிப்பிற்கு பின் எந்தவித பணியும் நடக்காததால், அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர் காலி பணியிடத்தால் உயர்கல்விக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.நம்பிக்கை அளிக்கிறதுஇது குறித்து தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலர் தங்கமுனியாண்டி கூறுகையில், &'&'அரசு கல்லுாரிகளில் யு.ஜி.சி., தகுதி முடித்து, பல ஆண்டு களாக பணிபுரிகிறோம். இதில், பலர் 40 வயதை கடந்துள்ளனர்.&'&'உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பு நம்பிக்கை அளிக்கிறது. விரைந்து கவுரவ விரிவுரையாளர்களுக்கான சிறப்பு டி.ஆர்.பி., தேர்வை நடத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,&'&' என்றார்.