மாணவர்களுக்கு போன் அமைச்சர் மகேஷ் தகவல்
சென்னை: &'&'ஆன்லைன் வகுப்புகள் நடத்த மாணவர்களுக்கு மொபைல் போன் அவசியம். அரசு பள்ளி மாணவர்களிடம் மொபைல் போன் இல்லை. இதுகுறித்து முதல்வரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும்,&'&' என, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.அரசு பள்ளி ஆசிரியர்கள், இரண்டு லட்சம் பேருக்கு, அடிப்படை கணினி இயக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின. பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:ஆசிரியர்கள் அடிப்படை கணினி இயக்குதலை தெரிந்து கொள்ள, இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கும் இந்த பயிற்சி உதவும்.மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த, கல்வி, &'டிவி&' மட்டுமே உள்ளது என்ற நிலை இல்லாமல், வேறு ஆன்லைன் வழிகளிலும் வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக மாணவர்களிடம் மொபைல் போன் இருக்க வேண்டும். ஆனால், பல அரசு பள்ளி மாணவர் களிடம் மொபைல் போன் வசதி இல்லை. இது குறித்து, முதல்வரிடம் பேசி உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். நடப்பு கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் இருந்து, 75 ஆயிரம் மாணவர்கள் உட்பட, இரண்டு லட்சம் பேர் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.