உள்ளூர் செய்திகள்

இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி

இத்தகவலை சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு சென்னைப் பல்கலைக்கழக படிப்புகளிலும் தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ல படிப்புகளிலும் இலவசக் கல்வி வழங்கப்படும். கல்விக் கட்டணம், தங்கம் விடுதி மற்றும் உணவுக்கான கட்டணம் வசூலிக்கப்படாது. இத்திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும்..இதுகுறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பிஎச்டி மாணவர் சேர்க்கையில் வருகிற ஜனவரி முதல் ரோஸ்டர் முறை பின்பற்றப்படும். மாணவர்களின் கேள்வித்தாள்கள் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளன என்று திருவாசகம் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்