உள்ளூர் செய்திகள்

சிறந்த கல்லூரிக்கு விருது: துணைவேந்தர் அறிவிப்பு

இதற்கான விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: உயர்கல்வி என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இதற்குக் காரணம் பணவசதியின்மையே காரணம். உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு என்றாலும் கல்வித் தரத்தில் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.   இந்த ஆண்டு பிளஸ்2 பொதுத் தேர்வை ஏழு லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். இதில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயர்கல்வி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றுள்ளனர். உயர்கல்வியைப் பொறுத்தவரை, தனியார் கல்லூரிகளின் பங்களிப்பு அவசியம். நாட்டின் மொத்த உற்பத்தியில் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டுமென கோத்தாரி கமிஷன் பரிந்துரை செய்தது. இன்று வரை நம்மால் நான்கு சதவீத்திற்கு மேல் ஒதுக்க முடியவில்லை. சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு திருவாசகம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்