உள்ளூர் செய்திகள்

இளைஞர்களிடம் விமானப்படையில் சேரும் ஆர்வம் அதிகரிப்பு

ஐதராபாத்: விமானப்படையில் இளைஞர்கள்  சேருவது அதிகரித்துள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் விமானப்படை அகடமியில் பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின் அமைச்சர் அந்தோணி குறிப்பிடுகையில், ‘நான் மூன்றாண்டுகளுக்கு முன் அமைச்சராக பொறுப்பேற்ற போது, விமானப்படை அகடமியில் மிக குறைவான இளைஞர்களே சேர்ந்தனர். அதுமட்டுமல்லாது, விமானப்படையிலிருந்து அதிகம் பேர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். தற்போது, நிலைமை தலைகீழாக உள்ளது. அதிகம் சம்பளம் கொடுக்கும் பணிகள் நிறைய உள்ள நிலையில், விமானப்படையில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 97 பேர் மட்டுமே விமானப்படை அகடமியில் சேர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு முதல் கட்டத்தில் 172 பேரும், இரண்டாவது கட்டத்தில் 175 பேரும் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்