உள்ளூர் செய்திகள்

சத்துணவு வழங்கப்படாத மலை கிராம பள்ளிகள்

க.மயிலை ஒன்றியத் திற்கு உட்பட்ட தண்டியக்குளம், காந்திக்கிராமம், பண்டாராவூத்து, இந்திராநகர், பொம்முராஜாபுரம் போன்ற மலைக் கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தில் கீழ் தொடங்கப்பட்டன. இந்த பள்ளியில் 210 மாணவ, மாணவியர் படி த்து வருகின்றனர். இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக மதிய சத்துணவு வழங்கப்படவில்லை.இதனால் இப்பள்ளியில் படிக்கும் ஏழை,எளிய வசதியில்லாத காலையிலேயே உணவை சமைத்து எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. மாணவர்கள் சத்துணவு கிடைக்காமல் மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். மலை கிராம மாணவர்களின் நலன் கருதி சத்துணவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்