உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பங்கள் பற்றாக்குறை: ஏமாறும் இளைஞர்கள்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் வராததால், இளைஞர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து தலைமை மற்றும் முக்கிய தபால் நிலையங்களில், விண்ணப்பம் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் டிச., 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடுமலை மற்றும் கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவு அஞ்சலகத்திற்கு வரத்துவங்கினர். ஆனால், போதிய விண்ணப்பங்கள் இருப்பு இல்லாததால், மக்கள் தினமும் அஞ்சலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மூன்று நாட்களாக விண்ணப்பங்களே வரவில்லை. இறுதி நாளுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இது குறித்து அஞ்சலக அதிகாரிகளிடம் கேட்டால், விண்ணப்ப படிவங்கள் வரவில்லை; வந்தால் வழங்கிவிடுவோம். இருப்பு இல்லை; அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது என்று சமாளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை விண்ணப்ப படிவங்கள் வரவில்லை. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பலரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்வு எழுத காத்திருந்த இளைஞர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் வந்த உடனேயே விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், விண்ணப்ப படிவங்கள் வரவில்லை; இருப்புமில்லை’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்