உள்ளூர் செய்திகள்

கவுன்சிலிங்கை விரைந்து முடிக்க சென்டாக் முடிவு

மாநிலத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா என நான்கு மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட உயர் படிப்புகளில் மொத்தம் 230 சீட்டுகள் உள்ளன. இதில் தனியார் கல்லுாரிகளில் 103 சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டிலும், 110 சீட்டுகள் மேலாண்மை சீட்டுகளாக நிரப்பப்படுகிறது. அதேபோன்று மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி, மாகி பல் மருத்துவ கல்லுாரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் 29 எம்.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடான 18 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது.விண்ணப்பம்முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த 30ம் தேதி முதல் சென்டாக் நிர்வாகம் ஆன்லைனில் விண்ணப்பம் பெற்றது. நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 13ம் தேதிவரை விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.முதுநிலை மருத்துவம்எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு 1,869 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 400 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1370 பேரும், இவ்விரு இடங்களுக்கு சேர்த்து 99 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலங்களை ஒப்பிடுகையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 499 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 1370 விண்ணப்பங்களும் குவிந்துள்ளன.இட ஒதுக்கீட்டு ரீதியாக விண்ணப்பங்களை ஆராயும்போது தெலுங்கு பேசும் மாணவர்கள் 18 பேரும், கிறிஸ்துவ மாணவர்கள் 13 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர விளையாட்டு வீரர்கள் 4, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு 11, விடுதலை போராட்ட வீரர் வாரிசு 25 பேர் விண்ணப்பித்துள்ளனர்.முதுநிலை பல் மருத்துவம்எம்.டி.எஸ்., படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டில் 53 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் 62 பேரும், அரசு மற்றும் நிர்வாக ஆகிய இரு ஒதுக்கீட்டிலும் 17 பேர் என மொத்தம் 132 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநில அளவில் புதுச்சேரியில் இருந்து 70 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 62 பேர் விண்ணப்பித்துள்ளனர். இட ஒதுக்கீட்டு ரீதியில் விளையாட்டு பிரிவில் 1,முன்னாள் ராணுவ வீரர் 1, விடுதலை போராட்ட வீரர் வாரிசு 8, தெலுங்கு பேசும் பிரிவில் 1 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்தாண்டு, முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு ஜூன் மாதமே விண்ணப்பம் பெற்றும் கூட சென்டாக் கவுன்சிலிங் காலத்தோடு நடத்தவில்லை.எம்.டி., எம்.எஸ்.,படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்ட சூழ்நிலையில், புதுச்சேரியில் ஒரு கவுன்சிலிங் கூட நடத்தாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்தாண்டு முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 2001 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் கவுன்சிலிங்கை விரைந்துமுடிக்க அனைத்து பணிகளையும் சென்டாக் முடுக்கிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்