உள்ளூர் செய்திகள்

அனிமேஷன், கேமிங் துறைக்கு புதிய கொள்கை

சென்னை: அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைக்காக புதிய தனி கொள்கையை தயாரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.இது குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் குமரகுருபரன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறை தொடர்பாக, புதிய கொள்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த துறைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இதற்கான சிறப்பு மையம் உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்