உள்ளூர் செய்திகள்

பாட புத்தகம் மொழிபெயப்பு: விதிமுறைகள் அறிவிப்பு

இதுகுறித்து, யு.ஜி.சி., சார்பில், பல்கலைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அந்தந்த மாநில தாய்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை மேம்படுத்த வேண்டும். இதற்கு, ஆங்கிலத்தில் இருக்கும் பட்டப்படிப்பு புத்தகங்களை, மாநில மொழிகளில், மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு, மொழி பெயர்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பு, மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும். நீளமான வரிகளை தவிர்க்க வேண்டும். மொழி மாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பயன்படுத்தலாம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக, யு.ஜி.சி., வழங்கியுள்ள வார்த்தைகளை, சரியாக குறிப்பிட வேண்டும். புதிய வார்த்தைகள் அறிமுகம் செய்ய, அனுமதி பெற வேண்டும்.மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையிலும், சிக்கலான வார்த்தைகள், வரிகள் இல்லாமலும் கவனமாக மொழி பெயர்க்க வேண்டும். மொழி பெயர்ப்பின் போது, பொருத்தமான உள்ளூர் வார்த்தை கிடைக்காவிட்டால், அந்த இடத்தில் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தலாம். சாதாரணமாக, பெரும்பாலானோர் உபயோகிக்கும் பொதுவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அரிதான, மிகவும் புலமைமிக்க வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். மொழி மாற்றத்தின்போது, சரியான அர்த்தம் புரியும் வகையில், வார்த்தைகளும், வரிகளும் அமைய வேண்டும்.இவ்வாறு பல்வேறு வழிகாட்டு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்