உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு துறையில் வேலை: தேர்வு அறிவிப்பு

தமிழக அரசின் துணி நுால் துறையில், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 5; வேலைவாய்ப்பு துறையில், உதவி பயிற்சி அதிகாரி பதவியில், 2 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, கணினி வழி போட்டி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ளது.இந்த தேர்வு, அக்., 5, 6ல் நடக்கிறது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் ஆக.,16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்